‘எழில் நிலா’ தமிழ் வலைத்தளம் ஒரு மாத, வார சஞ்சிகை அல்ல. இது ஒரு ‘வலைத்தள மின் நூலகம்’. இங்கு எனக்குப் பிடித்த சில ஆக்கங்களை ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், எனக்குப் பிடித்த, படித்துச் சுவைத்த, சிந்தித்த சில பகுதிகள், மற்றும் உங்களுக்கு உதவக்கூடிய தமிழ் இணையம் பற்றிய சில கடந்த கால, நிகழ்காலத் தகவல்களையும் இணைத்துள்ளேன்.
நீங்களும் இந்த மின் நூல் நிலையத்திற்குள் நுழைந்து உங்களுக்கு விருப்பமான பகுதிகளை வாசிக்கலாம். இவற்றில் சில உங்களுக்கும் பிடிக்கலாம் அல்லது பயன்படக்கூடியதாகவும் இருக்கலாம். மேலும் இத்தளம் தமிழ் யுனிகோட் எழுத்து முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றது (2003). இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
நன்றி!
கனடாவிலிருந்து..
ஜனவரி 14, 2003