Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

நினைவில் நிற்பவை

20 வருடங்களை நிறைவு செய்யும் எழில்நிலா!

ஜூலை 14, 2017 உடன் எழில்நிலா வலத்தளம் தனது 20வது வருடத்தைப்பூர்த்தி செய்துகொண்டுள்ளது.

1997ஆம் ஆண்டில் இந்த எழில்நிலா தமிழ் வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட விதமும் அதனுடைய செயற்பாடுகளையும் இத்தளத்தில் இருக்கும் பல கட்டுரைகள் மூலமும் வாசகர்கள் வழங்கிய பின்னூட்டங்கள் மூலமும் நீங்கள் தெரிந்துகொள்ளளாம். தமிழை முதன் முதலில் இணையத்தில் பயன்படுத்திக்கொள்வதற்கு இத்தளம் எவ்வகையான பங்களிப்பைச்செய்திருக்கின்றது என்பதற்கும் கட்டுரைகளும் பின்னூட்டங்களும் சான்றாக உள்ளன.

தற்போதைய காலகட்டத்தில் தமிழில் ஒரு வலைத்தளத்தை ஆரம்பிப்பது என்பது மிகவும் எளிமையாக்கப்பட்டிருக்கின்றது. தமிழில் பல லட்சம் வலைத்தளங்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. மக்களுக்குத்தேவையான அனைத்து தரவுகளும் தமிழில் பெற்றுக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளவும் ஏதுவாகியிருக்கின்றது. இதற்காக இலை மறை காயாக இருந்து, ஊதியமின்றி உழைத்த அனைத்து தமிழ் கணிஞர்களுக்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இத்தளத்தில் உள்ள பல கட்டுரைகள் பழைய பல செய்திகளை தாங்கியுள்ளதால் அவற்றை அப்படியே பேணிக்காக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தளத்தை முற்றாக மூடிவிடாமல் பயனர்கள் பாவனைக்காக ஒரு திறந்த வாசகசாலையாக வைத்திருக்க விரும்புகின்றேன்.

எழில்நிலாவின் ஆரம்ப வளர்ச்சியில் எனக்கு உதவி புரிந்த அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றிகள். எழில்நிலாவின் 10 ஆண்டு நிறைவு நாளில் எனக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பிய நண்பர்களும் இந்த அறிவிப்பை காண்பார்கள் என்று நினைக்கின்றேன். அவர்களுக்கும் எனது நன்றிகள்!

ஜூலை 14, 2017