புத்தம் புதிதாகப்
….பிறக்க வேண்டும்
நித்தம் விடிவானில்
….பறக்க வேண்டும்
செத்த விலங்கோடும்
….அன்பு வேண்டும்
சித்தம் கலையாத
….பண்பு வேண்டும்
புத்தம் மறவாத
….புனிதம் வேண்டும்
ரத்தம் பழகாத
….மனிதம் வேண்டும்
சத்தம் வெல்லாத
….அமைதி வேண்டும்
யுத்தம் இல்லாத
….பூமி வேண்டும்
-கவிஞர் புகாரி